கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஒன்றிய அரசு என சிறுமைப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல: ஓபிஎஸ்

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

DIN


இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழநாட்டில் தேசியத்திற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, தமிழ்நாடு திசைமாறி செல்கிறதோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே மேலோங்கி நிற்கிறது.

கூட்டாட்சித் தத்துவம் குறித்து தலைவர்கள் கூறிய வார்த்தைகளை வைத்து இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறோம் என்பதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், எந்தத் தலைவரும் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால் "மாநிலங்கள் பிரித்து தரப்பட்டுள்ளது" என்றுதான் பேரறிஞர் அண்ணாவே 1963-இல் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார்.

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது இந்திய தாய்த் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலும், சிறுமைப்படுத்துவது போலும் அமைந்துள்ளதாக தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். இதுபோன்ற செயல் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

அடுத்தபடியாக, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஆளுநர் உரையிலிருந்து நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என்று எம்எல்ஏ ஈ.ஆர். ஈஸ்வரன் பேரவையில் கூறியிருக்கிறார். இவ்வாறு கூறியது நியாயமா? இந்திய இறையாண்மைக்கு உகந்ததா?

ஜெய்ஹிந்த் சொல்லை இழிபடுத்தும் வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக எம்எல்ஏ ஈஸ்வரன் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்! பஞ்சாபின் 3 எம்பிக்கள் புறக்கணிப்பு!

செங்கோட்டையன் பதவி பறிப்பு: இபிஎஸ்ஸின் கோவை பிரசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

குடியரசு துணைத் தலைவர் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கியது! முதலில் வாக்களித்த மோடி!

அதிமுக கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு

தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு: 81 ஆயிரத்தைக் கடந்தது!

SCROLL FOR NEXT