முகப்பு
செங்கல்பட்டு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அமெரிக்கா நாட்டின் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் சுமாா் ரூ 25 லட்சம் மதிப்பிலான 250 கேவிஏ ஜெனரேட்டா் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  ரூ. 25 லட்சம் மதிப்பில் மின்சார ஜெனரேட்டர்: அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கல்

அமெரிக்கா நாட்டின் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் சுமாா் ரூ 25 லட்சம் மதிப்பிலான 250 கேவிஏ ஜெனரேட்டா் எந்திரம் செங்கல்பட்டு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  ரூ. 25 லட்சம் மதிப்பில் மின்சார ஜெனரேட்டர்: அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கல்

அமெரிக்கா நாட்டின் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் சுமாா் ரூ 25 லட்சம் மதிப்பிலான 250 கேவிஏ ஜெனரேட்டா் எந்திரம் செங்கல்பட்டு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
செங்கல்பட்டு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அமெரிக்கா நாட்டின் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் சுமாா் ரூ 25 லட்சம் மதிப்பிலான 250 கேவிஏ ஜெனரேட்டா் வழங்கப்பட்டது.
பகிர்:


செங்கல்பட்டு: அமெரிக்கா நாட்டின் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் சுமாா் ரூ 25 லட்சம் மதிப்பிலான 250 கேவிஏ ஜெனரேட்டா் எந்திரம் செங்கல்பட்டு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 250 கேவிஏ ஜெனரேட்டர் இயந்திரம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டதற்கான விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

அமெரிக்கா வாழ் தமிழர்கள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறியூட்டல் உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை வழங்கி வருகிறது. 

இந்நிலையில், மின்சார விநியோகம் தடைப்படும் நேரங்களில் குறிப்பாக கரோனா நோய்களுக்கு ஆக்சிஜன் தடைபடாமல் இருப்பதற்காக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின் பேரில் மின்சாரம் தடைபடும் நேரங்களில் இயக்கக்கூடிய ரூ.25 லட்சம் மதிப்புள்ள 250 கேவிஏ மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரை வழங்கியுள்ளது. 

ஜெனரேட்டர் நிறுவப்பட்டதற்கான விழா செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது . விழாவிற்கு அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு முன்னாள் தலைவர் சஞ்சீவி, கொடையாளர் அருள்முடி , செங்கல்பட்டு அரசு மருத்துவம் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

ஆக்ஸிஜன் நிறுவப்பட்டு உற்பத்தி செய்யப்படும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 250 கே வி ஏ ஜெனரேட்டரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் திறந்து வைத்து இயக்கினார். 

விழாவில் மருத்துவ துறைத் தலைவர்கள் அனுபமா, பத்மநாபன், வி.டி .அரசு, செல்வராஜ், வள்ளியரசி, ரத்தினவேல் குமரன், கந்தன் கருணை, சுதாகர் உள்ளிட்ட டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் கூறுகையில், ஜூலை 1-ஆம் தேதி எல்அண்ட்டி நிறுவனத்தின் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உற்பத்தி நிலையம் ரூ.1.5 கோடி மதிப்பில் புதிதாக நிறுவப்பட்டு அந்த விழா அமைச்சர் தா.மோ.அன்பசரன் திறந்துவைக்க மாவட்ட ஆட்சியர்,எம்எல்ஏ எம்.பி கலந்துகொண்டனர். 

இதையடுத்து மின்சாரம் விநியோகம் தடைப்படும் நேரத்தில் தடையில்லா ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தமிழ்நாடு அறக்கட்டளை உதவியை நாடும் போது அவர்கள் உடனடியாக ரூ.25 லட்சம் மதிப்பில் இந்த ஜெனரேட்டர் பொருத்தி பேருதவி செய்துள்ளனர். இதனால் மின்சாரம் தடைபடும் பொழுது அதன் உற்பத்தி பணி தடைப்படாமல் தானாகவே இயக்கத்தை இயக்கிக்கொள்ளும் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளதால் உற்பத்தியை இயக்கி கொள்ளுமளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் தட்டுப்பாடு என்பது இருக்காது என மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →