சிறுவாபுரி முருகன் கோவில் 
தமிழ்நாடு

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து 

ஊத்துக்கோட்டையை அடுத்து அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோவியிலில் நாளை செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஊத்துக்கோட்டையை அடுத்து அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோவியிலில் நாளை செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

செவ்வாய்க்கிழமையில் ஆறு வாரங்கள் வந்து விளக்கேற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் செவ்வாய்கிழமைகளில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே, செவ்வாய்க்கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காணப்படுவதும் வழக்கம்.

தற்போது கரோனா பெரும் தொற்றால் ஊரடங்கு உள்ள நிலையிலும் நோய் பரவலை கட்டுப்படுத்தவும் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும் செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT