தமிழ்நாடு

'பப்ஜி' மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

DIN

சிறுவர், சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசி விடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரியான மதன்குமார் தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தனது யூடியூப் சேனலில் தொடா்ந்து நடத்தி வந்தார். அந்த சேனலில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பதிவுகளை மதன்குமார் வெளியிட்டு வந்தார். இதன் மூலம் லட்சக் கணக்கில் பணம் சேர்ந்தது.

இதுதொடா்பாக காவல் துறையினரிடம் புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் மதன்குமாா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 18 -ஆம் தேதி கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மதனை சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை சைதாபேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதனை அடுத்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மதன் மனு தாக்கல் செய்தாா். 

இந்நிலையில், ஆபாசமாக பேசி விடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT