முகப்பு
தமிழ்நாடு

கோவை, வேலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
கோவை, வேலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.

இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி  மாவட்டங்களில் கனமழைக்கும், புதுவை மற்றும் பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை நீலகிரி, கோவை, தேனி, குமரி, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், நாளை மறுநாள் நீலகிரி, கோவை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நிலச்சரிவு எச்சரிக்கை

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →