முகப்பு
தமிழ்நாடு

தமிழக உயர்கல்வி மன்றத் தலைவராக அமைச்சர் பொன்முடி நியமனம்

மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
அமைச்சர் க.பொன்முடி
பகிர்:

மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு புதிதாக தலைவர், துணைத் தலைவர் மற்றும்  உறுப்பினர்களை நியமித்து முதல்வர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், தலைவராக அமைச்சர் பொன்முடி, துணைத் தலைவராக ராமசாமி, உறுப்பினர்களாக பேராசிரியர் கிருஷ்ணசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பணிவழி உறுப்பினர்களாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், உயர்கல்வி செயலாளர், யூசிஜி செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மற்றும் ஆளுநரின் செயலாளரை முதல்வர் நியமித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →