தங்கம் வாங்க நல்ல நாள்: சவரனுக்கு ரூ.240 குறைந்தது 
தமிழ்நாடு

தங்கம் வாங்க நல்ல நாள்: சவரனுக்கு ரூ.240 குறைந்தது

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.4,520க்கு விற்பனையாகிறது.

DIN


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.4,520க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையானது கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தநிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து, ரூ.4,520 ஆக உள்ளது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா குறைந்து, ரூ.73.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து, ரூ.73,400 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,520
1 பவுன் தங்கம்...............................36,160
1 கிராம் வெள்ளி.............................73.40
1 கிலோ வெள்ளி.............................73,400

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,550
1 பவுன் தங்கம்...............................36,400
1 கிராம் வெள்ளி.............................74.10
1 கிலோ வெள்ளி.............................74,100
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையின் சாதனை நாயகன் விராட் கோலி!

தாய் கிழவி வாரா பாடல்!

20 நாள்களில் எடுக்கப்பட்ட 'ட்ரீம் கேர்ள்' காதலர் நாளில் ரீலீஸ்!

ஆரி நடிக்கும் புதிய படத்தின் டிரைலர்!

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவார் பொறுப்பேற்க வேண்டும்: புஜ்பால்

SCROLL FOR NEXT