தமிழ்நாடு

கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் ரூ. 35 லட்சத்திற்கு எள் விற்பனை

DIN


எடப்பாடி: எடப்பாடி அடுத்த தேவூர் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் 500 மூட்டை எள் ரூ. 35 லட்சத்திற்கு விற்பனையானது.

எடப்பாடி அடுத்த தேவூர் கூட்டுறவு வங்கி வளாகத்தில் செயல்பட்டு வரும், வேளாண் பொருள்களுக்கான விற்பனை மையத்தில், அப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்து வருகின்றனர்.

கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி, கடந்த 60 நாள்களுக்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது ஏலமானது, மீண்டும் தொடங்கியது. இப்போது ஏலத்தில் சுற்றுப்புற விவசாயிகள் உற்பத்தி செய்து இருந்த சுமார் 500 மூட்டை எள் ரூ. 35 லட்சத்திற்கு விற்பனையானது. 

இதில் சிகப்பு ரக எள் கிலோ ஒன்று ரூ. 88.50 முதல் ரூ. 103.60 வரை விற்பனையானது. அதேபோல வெள்ளை நிற எள் கிலோ ஒன்றுக்கு ரூ. 90.50 முதல் ரூ. 103.90  வரை விலை போனது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தின் வாயிலாக ரூ. 35 லட்சத்திற்கு எள் வணிகம் நடைபெற்றது. அடுத்து வரும் நாள்களில் எள் விலை சற்று உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பள்ளி ஊழியா் மாரடைப்பால் மரணம்

SCROLL FOR NEXT