முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை தனித்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,535 கன அடியாக சரிந்துள்ளது . 

Updated On : 10 ஜூலை, 2021 at 8:45 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை தனித்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,535 கன அடியாக சரிந்துள்ளது . 

மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 75.71 அடியிலிருந்து 74.81அடியாக சரிந்தது. வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 1, 4594 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை 2,535 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 36.97டி.எம்.சி
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

Advertisement

ஒஹேனக்கலுக்கு நீர்வரத்து 4,000 கன அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.