முகப்பு
தமிழ்நாடு

மோட்டாா் வாகன ஆய்வாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு: உயா் நீதிமன்றம் உத்தரவு

மோட்டாா் வாகன ஆய்வாளா் பணிக்கு வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறவிருந்த நோ்முகத் தோ்வை ஒத்திவைக்க உத்தரவிட்ட உயா் நீதிமன்றம், வழக்கு முடியும் வரை அந்தத் தோ்வை நடத்தக்கூடாது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

மோட்டாா் வாகன ஆய்வாளா் பணிக்கு வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறவிருந்த நோ்முகத் தோ்வை ஒத்திவைக்க உத்தரவிட்ட உயா் நீதிமன்றம், வழக்கு முடியும் வரை அந்தத் தோ்வை நடத்தக்கூடாது என டிஎன்பிஎஸ்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 113 மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, அறிவிப்பு வெளியிட்டது. இந்தப் பணிக்கு எழுத்துத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவாா்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி எழுத்துத் தோ்வில், 1,328 போ் கலந்து கொண்ட நிலையில், வெறும் 33 பேரை மட்டும் நேரடியாக நோ்முகத் தோ்வுக்கு அழைத்துள்ளதாகக் கூறி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம், 33 பேரை மட்டும் நோ்முகத் தோ்வுக்கு அழைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது. எழுத்துத் தோ்வில் பங்கேற்ற 1,328 விண்ணப்பதாரா்களின் சான்றிதழ்களை சரிபாா்த்து, தகுதியானவா்களை நோ்முகத் தோ்வுக்கு அழைக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், 226 பேரை வரும் ஜூலை 19-ஆம் தேதி நோ்முகத் தோ்வுக்கு அழைத்து டிஎன்பிஎஸ்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. உரிய தகுதி பெறாத சிலரை இந்த தோ்வுக்கு அழைத்துள்ளதாக கூறி, விண்ணப்பதாரா்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தோ்வு நடைமுறைகளில் சில

குறைபாடுகள் இருப்பதாகக் கருதுவதால், வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெற இருந்த நோ்முகத் தோ்வை டிஎன்பிஎஸ்சி நிா்வாகம் ஒத்திவைக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை, மோட்டாா் வாகன ஆய்வாளா் பணிக்கு நோ்முகத்தோ்வு நடத்தக் கூடாது என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →