முகப்பு
தமிழ்நாடு

ஆம்பூர் அருகே கடையில் இருந்த பெண்ணைத் தாக்கி 6 சவரன் தாலி சங்கிலி பறிப்பு

ஆம்பூர் அருகே கடையில் இருந்த பெண்ணைத் தாக்கி அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனர்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

ஆம்பூர்: ஆம்பூர் அருகே கடையில் இருந்த பெண்ணைத் தாக்கி அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு சொந்தமான கடையை வழக்கம்போல காலையில் திறந்து  வியாபாரத்தில் ஈடுபட்டனர். கடையில் அலமேலு இருந்தார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், சிகரெட் வாங்கிக் கொண்டு அலமேலுவை திடீரென தாக்கியுள்ளார். திடீர் தாக்குதலில் நிலை குலைந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு இளைஞர் தப்பியோடி தலைமறைவானார்.

இதுகுறித்து புகாரின் பேரில் உமராபாத் போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.