புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
புதுச்சேரியில் ஜூலை 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஜூலை 16 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி புதுச்சேரியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதுபோல புதுச்சேரியில் அனைத்துக் கல்லூரிகளும் வருகிற 16 ஆம் தேதி முதல் செயல்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என்றும் கூறினார்.
முன்னதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.