முகப்பு
தமிழ்நாடு

மேலும் தளர்வுகள்?: முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச்செயலத்தில் நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. 
ஆலோசனயில் தலைமைச் செயலர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முன்னதாக தமிழகத்தை பொறுத்தவரை ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →