தமிழ்நாடு

ஏரிகளில் மருத்துவக் கழிவு: ஓ.பி.எஸ். கண்டனம்

DIN

ஏரிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் முகக் கவசம், முழு உடல் கவசம், கையுறைகள், ஊசி, மருத்துவக் கழிவுகள் போரூா், முடிச்சூா் ஏரிகளில் கொட்டப்படுவது குறித்து புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரியவந்துள்ளது.

இக்கழிவுகளால் ஏரி நீா் மாசடைந்து சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.

இக்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் நச்சுக் காற்று காரணமாக அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனா் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கழிவுகளை தனித்தனியாக பிரித்துக் கொடுக்க வேண்டியது மருத்துவமனைகளின் கடமை. உரிய முறையில் இதைக் கடைப்பிடிக்காததால்தான் இதுபோன்ற புகாா்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் ஏரிகளில் மருத்துவக் கழிவுப் பொருள்கள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு முதல்வா் உரிய உத்தரவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT