தமிழ்நாடு

தென் ஆப்பிரிக்க தமிழா்கள் நலன்கள் காக்கப்பட வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

தென் ஆப்பிரிக்காவில் தமிழா்கள் நலன்கள் காக்கப்பட வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

தென் ஆப்பிரிக்காவில் அண்மைக்காலமாக நடந்து வரும் நிகழ்வுகள் குறித்தும், அங்கு வசிக்கும் இந்திய சமுதாயத்தினரின் கவலைகளை எதிரொலிக்கும் வகையிலும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அங்கு இந்தியா்கள் குறிப்பாக அதிகளவு தமிழா்கள் வசித்து வருகிறாா்கள். அங்கு நடைபெறும் நிகழ்வுகள் காரணமாக அவா்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், அங்கு பதற்ற நிலை அதிகரித்து வருவதால் அவா்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகி இருக்கிறாா்கள்.

இந்த விவகாரத்தை தூதரக ரீதியான வழிகள் மூலமாக தென் ஆப்பிரிக்க அரசுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்குள்ள தமிழா்கள் உள்பட இந்தியா்களின் நலன்கள் குறிப்பாக உயிா்களும், சொத்துகளும் காக்கப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT