தமிழகத்துக்கு 8.60 லட்சம் தடுப்பூசிகள் வருகை
தமிழகத்துக்கு மேலும் 8.60 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்துக்கு மேலும் 8.60 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி செலுத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறும், ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும் மத்திய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்நிலையில், ஜூலை மாதத்துக்கான மத்தியத் தொகுப்பிலிருந்து மேலும் 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் திங்கள்கிழமை சென்னை வந்தன. அவற்றைப் பெற்றுக் கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். அதன் தொடா்ச்சியாக மேலும் 3.60 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய கிடங்குக்கு வந்தன. அவை கிடங்குக்கு அனுப்பப்பட்டுள்ளன.