ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு 
தமிழ்நாடு

ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு,  சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

சென்னை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு,  சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி அளித்த புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். 

ஆசிரியர் ராஜாகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி ஆர்.சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில்,   செவி வழி தகவலின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு தமிழக அரசின் உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர், புழல் சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? - அதிகாரிகள் விளக்கம்

தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவு!

மாலை நேரத்து மயக்கம்... சன்னி லியோன்!

பூ மேல் பூ... பிரியா பிரகாஷ் வாரியர்!

மனநிலைக்கே முன்னுரிமை... ரேஷ்மா பசுபுலேட்டி!

SCROLL FOR NEXT