மருத்துவமனையில் மதுசூதனன்: சசிகலா வந்தார், ஈபிஎஸ் சென்றார்
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனின் உடல்நலனை விசாரிக்க மருத்துவமனைக்கு சசிகலா வந்ததால் உள்ளே இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனின் உடல்நலனை விசாரிக்க மருத்துவமனைக்கு சசிகலா வந்ததால் உள்ளே இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது, உடல்நலன் குறித்து விசாரிக்க அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
Advertisement
Advertisement
அப்போது, அதிமுக கட்சிக் கொடியுடன் மருத்துவமனைக்கு சசிகலா வந்ததால், உடனடியாக பழனிசாமி மருத்துவமனையிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, மருத்துவர்களை சந்தித்த சசிகலா, மதுசூதனின் உடல்நலன் குறித்து விசாரித்த பின்பு செய்தியாளர்களிடம், அதிமுகவின் மீது பற்றுக் கொண்ட மதுசூதனன் விரைவில் உடல்நலம் பெறவேண்டும் எனத் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு ஈபிஎஸ், சசிகலா ஒரே நேரத்தில் வந்ததும், சசிகலா காரில் அதிமுக கொடியுடன் வந்ததும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.