முகப்பு
கர்நாடகம் - தமிழகம் பேருந்து போக்குவரத்துக்கு தடை: தாளவாடி அரசுப் பேருந்தில் நிரம்பி வழியும் கூட்டம்
தமிழ்நாடு

கர்நாடகம் - தமிழகம் பேருந்து போக்குவரத்துக்கு தடை: தாளவாடி அரசுப் பேருந்தில் நிரம்பி வழியும் கூட்டம்

தாளவாடிக்கு போதிய அரசுப் பேருந்து வசதியின்றி மலைவாழ் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
கர்நாடகம் - தமிழகம் பேருந்து போக்குவரத்துக்கு தடை: தாளவாடி அரசுப் பேருந்தில் நிரம்பி வழியும் கூட்டம்
பகிர்:

தமிழகம் - கர்நாடக இடையே பேருந்து வசதி தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் உள்ள தாளவாடிக்கு போதிய அரசுப் பேருந்து வசதியின்றி மலைவாழ் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரானா தொற்று குறைந்து வருவதால் கடந்த 5-ம் தேதி முதல் பொது போக்குவரத்து சேவைக்கு தமிழக அரசு அனுமதியளித்தது. இரு மாநில எல்லையில் உள்ள தாளவாடி மலைக்கிராமத்துக்கு  கர்நாடக  புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இரு மாநிலங்களிடையே  பொது போக்குவரத்து தடை காரணமாக   தமிழக அரசுப் பேருந்துகள் தற்போது  மாற்றுப்பாதையான தலமலை வழியாக  இயக்கப்படுகின்றன. 

சாதாரண நாள்களில்  தாளவாடிக்கு 8 அரசுப் பேருந்துகள் பேருந்துகள் இயக்கப்பட்டன. 30 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட தாளவாடியில்  கல்வி, மருத்துவ சேவை மற்றும் விவசாயப் பொருள் விற்பனை போன்ற அன்றாட பணிகளுக்கு  சத்தியமங்கலம் வந்து செல்ல வேண்டியுள்ளது. 

தற்போது தொற்று காரணமாக 3 அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்குவதால் போதுமான பேருந்து போக்குவரத்து வசதியின்றி மக்கள் தவிக்கின்றனர். வனவிலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக தாளவாடியில் இருந்து தலமலை வழியாக அவசர கால மருத்துவ சிகிச்சைக்கு கூட இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குறைந்தளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாவதுடன் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

எனவே சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடிக்கு 3 பேருந்துகளுடன் கூடுதலாக 5 பேருந்துகள்  இயக்கினால் சமூக இடைவெளியுடன் பயணிகள் நெரிச்சலின்றி பயணிக்க இயலும்  என தாளவாடி பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →