கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 20 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்சிக்கு ரசிகர் மன்ற மாநில துணை தலைவர் கி.மனோகரன் தலைமை தாங்கினார். நிர்வாகி ஜே.கே. பெருமாள் முன்னிலை வகித்தார். அகில இந்திய விவசாய பிரிவு துணைத் தலைவர் நடிகர் சூரியகணேஷ் கலந்து கொண்டு சிவாஜி உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பேரவை மாநில செயலாளர் சிவலிங்கம், செயல் தலைவர் மஹப்பு பாஷா, நகர தலைவர் கார்திக் முனுசாமி, அர்ஜுணன் ராஜா, சபரிநாதன், ஆடு முகம், சுரேஷ், ராஜீவ் காந்தி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.