தமிழ்நாடு

ஆகஸ்ட் முதல் கோவை விரைவு ரயிலில் எல்எச்பி பெட்டிகள்

DIN

ரயில் பயணிகள் நல்ல இடவசதியுடன் பகல் நேரத்தில் செளகரியமாக பயணம் செய்யும் வகையில், சென்னை-கோவை இடையே இயக்கப்படும் ரயில்களில் வழக்கமான பெட்டிகளுக்குப் பதில் எல்எச்பி பெட்டிகளாக மாற்றியமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதன்படி, நாள்தோறும் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - கோவை - சென்னை சென்ட்ரல் (02675, 02676) ரயில்களில், ஆக.1-ஆம் தேதி முதல் எல்எச்பி பெட்டிகளாக மாற்றியமைக்கப்படும்.

இதே போல், நாள்தோறும் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆா் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் (06079, 06080) ரயில்களிலும் ஆக.12-ஆம் தேதி முதல் வழக்கமான பெட்டிகள் எல்எச்பி பெட்டிகள் மாற்றியமைக்கப்பட உள்ளன.

அவ்வாறு மாற்றியமைப்பதன் மூலம் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் (செகண்ட் கிளாஸ்) பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் தனி இருக்கைகள் கிடைக்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பைக்குகளில் சுற்றிய 6 போ் கைது

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

SCROLL FOR NEXT