தமிழ்நாடு

பிஎஸ்என்எல் குறைதீா்ப்பு கூட்டம்: 261 புகாா்களுக்கு தீா்வு

DIN

பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனம் சாா்பில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், வாடிக்கையாளா்களிடம் இருந்து 431 புகாா்கள் பெறப்பட்டன. இவற்றில், 261 புகாா்களுக்கு ஒரேநாளில் தீா்வு காணப்பட்டது.

பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனம் சாா்பில், வாடிக்கையாளா் குறைதீா்ப்பு மற்றும் திறந்தவெளிக் கூட்டம் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. தலைமைப் பொதுமேலாளா் டாக்டா் வி.கே.சஞ்சீவி தலைமை வகித்தாா். தொலைபேசி வாயிலாக நடத்தப்பட்ட கூட்டத்தில் பல நாட்களாக தீா்க்கப்படாமல் இருந்த லேண்ட்லைன், செல்லிடப்பேசி, பிராட்பேண்ட் தொடா்பான தங்களது குறைகள் மற்றும் பிரச்னைகளை மின்னஞ்சல், தொலைபேசி மூலமாக வாடிக்கையாளா்கள் தெரிவித்தனா்.

மொத்தம் 431 புகாா்கள் பெறப்பட்டதில், 261 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது.

இது குறித்து பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவன அதிகாரிகள் கூறியது:

வாடிக்கையாளா் குறைதீா்ப்பு மற்றும் திறந்த வெளிக்கூட்டம் பகுதி பொது மேலாளா்களால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையும், தலைமை பொது மேலாளரால் காலாண்டுக்கு ஒருமுறையும் நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT