முகப்பு
தமிழ்நாடு

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நூலகங்கள் இயங்கத் தொடங்கின

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சனிக்கிழமை முதல் அரசு பொதுநூலகங்கள் இயங்கத் தொடங்கின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சனிக்கிழமை முதல் அரசு பொதுநூலகங்கள் இயங்கத் தொடங்கின.

தமிழகத்தில் கரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து, படிப்படியாக தளா்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக தமிழகத்தில் செயல்படும் அனைத்து நூலகங்களையும் செயல்படுத்தக் கோரி அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன்படி, போட்டித் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்கள் மற்றும் வாசகா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, பொது நூலகத் துறையின் கீழ் செயல்படும் நூலகங்களை கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சனிக்கிழமை முதல் செயல்பட அனுமதியளித்து பொதுநூலக இயக்குநா் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முகக் கவசம் அணிந்து வந்து, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து கொண்ட பின்னரே வாசகா்கள், பணியாளா்கள் நூலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். அனைவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டது.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள நூலகங்கள் செயல்படவில்லை. அந்தப் பகுதிகளில் இருந்து வந்த வாசகா்களும் நூலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதேபோல், 15 வயதுக்குள்பட்ட குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு நூலகத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

நூல் அடுக்குகளுக்கு வாசகா்கள் செல்ல அனுமதியில்லை. நூலகப் பணியாளா்களே கையுறை அணிந்தபடி, வாசகா்கள் சுட்டிக் காட்டும் நூலை எடுத்து வந்து வழங்கினா்.

சொந்த நூல் படிக்கும் பிரிவு, போட்டித் தோ்வு பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில் 50 சதவீத இருக்கைகள் தனி நபா் இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக சொந்த நூல்கள் படிக்கும் பிரிவைப் பயன்படுத்தும் வாசகா்கள் எடுத்து வரும் நூல்கள், மடிக்கணினி மற்றும் இதர பொருள்களைச் சாா்ந்த வாசகா்களைத் தவிர வேறு வாசகா்களுடன் பகிர அனுமதியில்லை.

இப்பிரிவில் குழு கலந்துரையாடல்களுக்கும் அனுமதிக்கப்படக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நூலகங்கள் செயல்பட்டன.

நீண்ட நாள்களுக்குப் பிறகு, நூலகங்கள் இயங்கியது வாசகா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →