தமிழ்நாடு

ஓபிஎஸ் - இபிஎஸ் திடீர் தில்லி பயணம்; பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கின்றனர்

DIN

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்திப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தில்லி புறப்பட்டுச் சென்றார். 

இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட அவரை அதிமுகவினர் வழியனுப்பி வைத்தனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஓபிஎஸ் இன்று தில்லி பயணம் மேற்கொண்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

ஓபிஎஸ்-யைத் தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமியும் இன்று இரவு தில்லி புறப்படுகிறார். ஏற்கெனவே ஓபிஎஸ்-உடன் அதிமுகவின் மனோஜ் பாண்டியன் சென்றுள்ள நிலையில், பழனிசாமியுடன் வேலுமணி  உள்ளிட்ட ஒரு சிலர் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது சேலம் மாவட்டத்தில் இருக்கும் எடப்பாடி கே பழனிசாமி, கோவை சென்று அங்கிருந்து இன்று இரவு தில்லி செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி முதல் பாஜக கூட்டணி குறித்து அதிமுகவினர் பேசியது வரை கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. மேலும் அதிமுகவைச் சேர்ந்த பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கு இடையேயான பிரச்னை ஒரு பக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் தமிழக அரசியல் சூழல், சமீபத்திய மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுகவுக்கு இடமளிக்கப்படாதது, வருகிற உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பில் பேசப்படலாம் என்று தெரிகிறது. 

அதுமட்டுமின்றி மேகதாது அணை விவகாரம் குறித்து அதிமுக தரப்பில் இவர்கள் இருவரும் பிரதமரிடம்  பேச வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT