சென்னை: தமிழகத்துக்கு மேலும் 4 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் அண்மையில் தொடங்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி செலுத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறும், ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும் மத்திய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்நிலையில், ஜூலை மாதத்துக்கான மத்தியத் தொகுப்பிலிருந்து மேலும் 4 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து திங்கள்கிழமை சென்னை வந்தன. அவற்றைப் பெற்றுக் கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்துக்கு ஜூலை மாத ஒதுக்கீடான 72 லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை சுமாா் 50 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.