முகப்பு
தமிழ்நாடு

5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மிதமான மழை பெய்யக்கூடும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பகிர்:

சென்னை: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது:

தென் மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கண்ட 5 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 28 முதல் 30 வரை: ஜூலை 28-ஆம் தேதி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மேற்கண்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 160 மி.மீ., தேவாலாவில் 100 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 90 மி.மீ. கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறு, நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட்டில் தலா 70 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறில் 60 மி.மீ., சேலம் மாவட்டம் ஏற்காடு, திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சோழவரம், நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாா், வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடகிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகள், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 30-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம். இதுதவிர, தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கும் ஜூலை 30-ஆம்தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.