தமிழ்நாடு

கரோனா தொற்றுப் பாதிப்பு 1.3 சதவீதமாக குறைந்தது

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு விகிதம் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 1.44 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டதில் 1,808 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு விகிதம் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 1.44 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டதில் 1,808 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக தொற்றுக்குள்ளானோரில் அதிகபட்சமாக கோவையில் 169 பேருக்கும், ஈரோட்டில் 130 பேருக்கும், சென்னையில் 126 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 48,497-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 2,447 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.91 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 23,364 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 22 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,911-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT