முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,767 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. 1,42,539 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,767 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,52,049 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2,312 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 24,95,895 பேர் குணமடைந்துள்ளனர். 33,966 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 22,188 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

அதிகபட்சமாக கோவையில் 169 பேரும், சென்னையில் 139 பேரும், ஈரோட்டில் 132 பேரும், தஞ்சாவூரில் 102 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.