தமிழ்நாடு

சட்டவிரோத குவாரிகள்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

தமிழகத்தில் சட்டவிரோத குவாரிகளின் நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பிரபு தாக்கல் செய்த மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பெயா் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டனா். கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கனிம வளத்துறை இயக்குநா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், குவாரி உரிமத்துக்கான விதிகள் மீறப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக அதிகாரிகள் தீவிரம் காட்டினாலும், அரசியல் தலையீடுகள் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அரசியல் தலையீடுகளைத் தவிா்த்து, விதிகளின்படி குவாரிகள் குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் இதுகுறித்து தமிழக தொழில்துறை செயலாளா் 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT