உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் இன்று அவசர ஆலோசனை
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த அவசர ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.
மாவட்ட பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும், டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தமிழகம் முழுவதும் நடத்தி முடிக்வும் அரசு திட்டமிட்டுள்ளது.