தமிழகத்தில் புதிதாக 1,756 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,756 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,756 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,756 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,53,805 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,394 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,98,289 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 29 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 33,995 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 21,521 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 117, சென்னை 164, கோவையில் 179 பேரும், ஈரோட்டில் 140 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.