தமிழ்நாடு

திருப்பூரில் கரோனா தடுப்பூசி செலுத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

திருப்பூர்: திருப்பூரில் முறையாக கரோனா தடுப்பூசி செலுத்தக்கோரி பல்லடம் சாலையில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ளது பாரதி நகர், இந்தப் பகுதியில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாரதி நகர் பகுதியில் கடந்த இரண்டரை மாதமாக 350 நபர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்ப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, பாரதி நகர் பகுதியின் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக மனு அளித்திருந்தனர்.

எனினும், இதுதொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் சாலையில் உள்ள வித்யாலயம் பேருந்து நிறுத்தம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வீரபாண்டி காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக பல்லடம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT