சங்ககிரி அதிமுக எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். 
தமிழ்நாடு

சங்ககிரியில் அதிமுக எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் 

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் மாவட்டம், சங்ககிரி அதிமுக சார்பில் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

DIN


சங்ககிரி:  திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் மாவட்டம், சங்ககிரி அதிமுக சார்பில் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சங்ககிரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன் தலைமை வகித்து திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது போல் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், நகை கடனை தள்ளுபடி  செய்ய வேண்டும், மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 

மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம், சங்ககிரி கிழக்கு ஒன்றியச் செயலர் ரத்தினம், துணைச் செயலர் மருதாஜலம், தகவல்தொழில்நுட்ப அணி மாவட்ட நிர்வாகி பிரசாந்த், மகளிரணி நிர்வாகிகள் மங்கையர்கரசி, பெர்சியா, முன்னாள் நகரச்செயலர் ஆர்.செல்லப்பன் நிர்வாகிகள் என்.கதிரவன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT