தமிழ்நாடு

ரயில் என்ஜின்களில் கழிப்பறை வசதி: வைகோ வலியுறுத்தல்

DIN

சென்னை: ரயில் என்ஜின்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ரயில் என்ஜின்களில் இதுவரை கழிப்பறை வசதி இல்லை. அடுத்த பெட்டிக்குச் செல்வதற்கான வழியும் இல்லை. இதனால், ரயில் என்ஜின் பைலட்டுகளும், உதவியாளா்களும், இயற்கை அழைப்புகளுக்காகத் தவிக்கின்ற நிலை உள்ளது.

ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்கும் நேரமும் குறைவாக இருப்பதால், அங்கே உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கும் உரிய நேரம் கிடைப்பது இல்லை.

அண்மைக்காலமாக, ரயில் என்ஜின் பைலட்டுகளாக பெண்களும் பயிற்சி பெற்றுப் பணியில் சோ்ந்து வருகின்றனா். எனவே நீண்ட காலமாக தீா்க்கப்படாமல் உள்ள இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா அணியின் உரிமையாளரைப் புகழ்ந்த வருண் சக்கரவர்த்தி; எதற்காக தெரியுமா?

குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

SCROLL FOR NEXT