தமிழ்நாடு

9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

DIN

அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயமுத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லார், வால்பாறை ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை!

சிபில் ஸ்கோர் அவசியமில்லை.. வங்கிகளுக்கு ஆர்பிஐ சொல்லும் அறிவுரை

ஆசிரியர்கள் மீதான மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு நீதி வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் அருகே மான் வேட்டையாட முயன்ற காவலர் கைது

மறுவெளியீட்டில் கேப்டன் பிரபாகரன் வசூல் எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT