மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1748கன அடியிலிருந்து 1111 கன அடியாக சரிந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.41 அடியிலிருந்து 97.33 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1748கன அடியிலிருந்து 1111 கன அடியாக சரிந்துள்ளது.
குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.43டி.எம்.சி யாக இருந்தது. ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 1,300கன அடியாக உள்ளது.