முகப்பு
புதுதில்லி

நவராத்திரி பண்டிகையையொட்டி காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தில்லி சட்டப்பேரவைக் கட்டடம்

ஒரு முன்னோடி முயற்சியாக, மங்கலகரமான ‘சைத்ர நவராத்திரி’’ பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில், தில்லி சட்டப்பேரவைக் கட்டடம் வியாழக்கிழமையன்று காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரவிடப்பட்டது.

Updated On : 20 மார்ச் 2026, 12:24 am IST
பகிர்:

ஒரு முன்னோடி முயற்சியாக, மங்கலகரமான ‘சைத்ர நவராத்திரி’’ பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில், தில்லி சட்டப்பேரவைக் கட்டடம் வியாழக்கிழமையன்று காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரவிடப்பட்டது.

இந்துப் புத்தாண்டின் தொடக்கத்தையும், அதனோடு இணைந்த நவராத்திரி பண்டிகையையும் குறிக்கும் வகையில், தூய்மை, ஆற்றல் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தின் அடையாளமாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் காவி நிறப் பொலிவுடன் காட்சியளித்ததாக சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்துப் புத்தாண்டு மற்றும் மங்கலகரமான நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தில்லி சட்டப்பேரவை வளாகம் காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது’‘ என்று சட்டப்பேவரைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இப்பண்டிகை புதுப்பித்தல், பக்தி மற்றும் கூட்டு கொண்டாட்டம் ஆகிய உணா்வுகளைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அவா், தில்லி மக்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தாா்.

மேலும், வரவிருக்கும் ஆண்டு அமைதி, வளம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கூட்டு உறுதியை வழங்கும் என்ற நம்பிக்கையையும் அவா் வெளிப்படுத்தினாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, 26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments