முகப்பு
தமிழ்நாடு

கோயில்களில் தீ விபத்தைத் தடுக்கக் கோரி மதுரைக்கிளையில் வழக்கு

தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)
பகிர்:

தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளனர். 

கோயில்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களிலும் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை கோரி திருத்தன்பர்கள் சபையைச் சேர்ந்தவர்கள் மதுரைக்கிளை நீதிபதிகள் முன்பு முறையிட்டனர். இதையடுத்து இந்த முறையீடை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

இன்று காலை கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோயிலின் பழமையான கட்டடம் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.