சங்ககிரி: அறக்கட்டளை சார்பில் ஏழைகளுக்கு உணவு பொருள்கள் வழங்கல்
சங்ககிரி அருகே உள்ள கோணங்குட்டையூர் கிராமத்தில் இரு ஏழைகளுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி சிப்பம் மூட்டைகள், மளிகை சாமான்களை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிர்வாகிகள் வழங்கினர்.
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள கோணங்குட்டையூர் கிராமத்தில் இரு ஏழைகளுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி சிப்பம் மூட்டைகள், மளிகை சாமான்களை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிர்வாகிகள் புதன்கிழமை வழங்கினர்.
சங்ககிரியை அடுத்த கோணங்குட்டையூர் பகுதியைச் சேர்ந்த சின்னு (85), மாதேஸ்வரி (65) இருவரும் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முழு பொதுமுடக்கத்தையொட்டி சிரமத்தில் இருப்பதாக சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட்க்கு தகவல் அளித்துள்ளனர்.
அதனையடுத்து டிரஸ்ட் சார்பில் ரவி, விவேகானந்தன், கோபால், பாலகிருஷ்ணன், வெங்கடஸ்வரகுப்தா, முரளி, ஆனந்தகுமார் ஆகியோர்கள் இணைந்து இரு குடும்பத்திற்கும் தனித்தனியாக 25 கிலோ அரிசி சிப்பம் மூட்டை இரண்டு, மூன்று மாதங்களுக்கு தேவையான மளிகை சாமான்களை வழங்கினர். இந்த உணவு பொருள்களை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார் தலைமையில் செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் எஸ்.கணேஷ், நிர்வாகிகள் ராமச்சந்திரன், கதிர்மதி ஆகியோர் இருவரின் இருப்பிடத்திற்கு சென்று வழங்கினர்.