தமிழ்நாடு

காவல்துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் முத்துசாமி வழங்கல்

DIN

 
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆணைக்கல் பாளையத்திலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட எஸ்பி; தங்கதுரை தலைமை தாங்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதிசத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு காவல்துறையினருக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது, பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கென தனியாக 10 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 289 காவலர்களுக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். 

கரோனா தடுப்பூசி குறைந்த அளவே வந்துள்ளது. எனவே மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மக்கள்தொகை அதிகம் உள்ள இடங்களுக்கு முக்கியதுவம் அளித்து தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமையில் கரோனா நோயாளிகள் உள்பட அனைவரும் ஒரே வழியை பயன்படுத்துவதால் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா நோயாளிக்கென தனி வழிகள் மற்றும் தனிவார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT