முகப்பு
தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் கருணாநிதி பிறந்தநாள் விழா

அருப்புக்கோட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
அருப்புக்கோட்டை அண்ணாசிலை முன்பு கலைஞருக்கு மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்பு வழங்கிய அருப்புக்கோட்டை முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், நகரச்செயலாளர் ஏ.கே.மணி மற்றும் பாபு உள்ளிட்டோர்.
பகிர்:

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் கொண்டாட்டமானது முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவப்பிரகாசம் தலைமையிலும் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் திமுக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ரமேஷ் தலைமையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டையில் அண்ணா சிலை, நகராட்சி அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அருப்புக்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். உடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எம்.விஜயக்குமார், திமுக நகரச் செயலாளர் ஏ.கே.மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அப்போது நகரில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்ற ஒவ்வொரு இடத்திலும் திமுக கட்சிக்கொடியை ஏற்றி வைத்தபின் கலைஞர் மு.,கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை சூட்டி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதுடன் ஏழை எளியோர் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சசிகலா பொன்ராஜ்,திமுக ஒன்றியச்செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது,ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலிருந்த திமுக கட்சிக்கொடியை ஏற்றி வைத்தபின், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை சூட்டி மலர்தூவி மரியாதை செலுத்தியபின் விழாவில் கலந்துகொண்டோர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சுமார் 300க்கும்  மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளில் கிருமி நாசினி தெளித்தல் ஆகிய கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.