முகப்பு
தமிழ்நாடு

கரோனா நிவாரண நிதி: நடிகர் சூரி ரூ. 10.25 லட்சம் வழங்கினார்

கரோனா தடுப்பு பணிக்காக நடிகர் சூரி முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் ரூ. 25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் வழங்கினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

கரோனா தடுப்பு பணிக்காக நடிகர் சூரி முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் ரூ. 25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் வழங்கினார். 

கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி தனது தரப்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் தன்னுடைய மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தையும் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.