ஓபிஎஸ் தங்கிய இல்லம் அன்பில் மகேஷ்-க்கு ஒதுக்கப்பட்டது
சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓபிஎஸ் தங்கியிருந்த அரசு இல்லம் அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓபிஎஸ் தங்கியிருந்த அரசு இல்லம் அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதை அடுத்து அதிமுக அமைச்சர்கள் தங்கள் அரசு இல்லங்களை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. அந்தவகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கியிருந்த நிலையில் தற்போது அதனை காலி செய்தார்.
முன்னதாக அவர் வீட்டை காலி செய்ய கால அவகாசம் கோரியிருந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அரசு பங்களாவை காலி செய்துவிட்டு சென்னை தி.நகர் கிருஷ்ணா சாலையில் நடிகர் சிவாஜி இல்லம் அருகே உள்ள வீட்டில் குடிபெயர்ந்தார்.
அரசு பங்களாவிலிருந்து பெரும்பாலான காலி செய்துவிட்ட அவர் எஞ்சிய பொருள்களை நாளை எடுத்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து, ஓபிஎஸ் தங்கியிருந்த அரசு இல்லம் தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.