முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் கரோனாவுக்கு 18 போ் பலி; தொடர்ந்து குறையும் பாதிப்பு

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 712 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு மேலும் 18 போ் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
புதுவையில் கரோனாவுக்கு 18 போ் பலி; தொடர்ந்து குறையும் பாதிப்பு
பகிர்:

புதுச்சேரி: புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 712 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு மேலும் 18 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 9,458 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 530 பேருக்கும், காரைக்காலில் 121 பேருக்கும், ஏனாமில் 36 பேருக்கும், மாஹேவில் 25 பேருக்கும் என மொத்தம் 712 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,07,826-ஆக அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில்18 பேர் பலியாகினர். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,601-ஆக உயா்ந்தது. இந்த நிலையில், 1,215 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 1,368 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 8,126 பேரும் என மொத்தம் 9,494 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →