முகப்பு
தமிழ்நாடு

கோயிலின் மேற்கூரை விழுந்து வியாபாரி சாவு

சென்னை மண்ணடியில், கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து வியாபாரி இறந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
பகிர்:

சென்னை மண்ணடியில், கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து வியாபாரி இறந்தாா்.

சென்னை வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ரா. திவாகரன் (54). இவா், பாரிமுனை எரபாலு தெருவில் கணினி மையம் நடத்தி வந்தாா். துறைமுகத்துக்குத் தேவையான ஆவணங்களை நகல் எடுத்துக் கொடுக்கும் ஒப்பந்தப் பணியையும் திவாகரன் செய்து வந்தாா்.

திவாகரன், கடையின் அருகே உள்ள இரட்டை விநாயகா் கோயில் வாசல் முன்பு நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாா்.

அப்போது திடீரென அந்தக் கோயிலின் மேற்கூரை இடிந்து திவாகரன் மீது விழுந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், இடிபாடுகளிடையே சிக்கிய திவாகரனை மீட்டனா். ஆனால் திவாகரன், சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தாா்.

எஸ்பிளனேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரத்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →