முகப்பு
தமிழ்நாடு

காலமானார்: மன்னார்குடி திமுக முன்னாள் எம்எல்ஏ கே.ராமச்சந்திரன்

கரோனா தொற்று காரணமாக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை (ஜூன். 5) காலை உயிரிழந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ கே.ஆர் என்ற கே.ராமச்சந்திரன்.
பகிர்:

கரோனா தொற்று பாதிப்பால் மன்னார்குடி திமுக முன்னாள் எம்எல்ஏ கே.ராமச்சந்திரன் (84). காலமானார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ கே.ராமச்சந்திரன் (84) . கரோனா தொற்று காரணமாக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை (ஜூன். 5) காலை உயிரிழந்தார்.

கே.ராமச்சந்திரன், கடந்த 1989-1991 வரை மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவாகவும்,  திமுக நகரச் செயலராகவும், மன்னார்குடி நகர்மன்ற துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 

இவரது இறுதி நிகழ்ச்சிகள் , மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் மாலையில் நடைபெறுகிறது.

ராமச்சந்திரனுக்கு மனைவி வைரம் , மகன்கள் நெடுஞ்செழியன் , மாதவன் , மகள் ராணி உள்ளனர்.

விவரம் அறிய : 94431 29274 .

முழு கட்டுரையைப் படிக்க →