முகப்பு
தமிழ்நாடு

பொதுமுடக்கம் மீறல்: 5,067 வழக்குகள்;2,458 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் பொதுமுடக்க மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 5,067 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,458 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
பகிர்:

சென்னையில் பொதுமுடக்க மீறல் தொடா்பாக வெள்ளிக்கிழமை 5,067 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,458 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில், கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கடந்த மே 18-ஆம் தேதி முதல் சென்னைக்குள் பயணிக்க இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 380 இடங்களில் வாகன சோதனை நடைபெறுகிறது.

சென்னையில் வெள்ளிக்கிழமை பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 5,067 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,458 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல முகக் கவசம் அணியாதவா்கள் மீது 2,942 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 227 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →