FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வீடு, மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு சிலிண்டர் முன்னுரிமை! - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது பற்றி...

Updated On : 10 மார்ச் 2026, 3:50 pm IST
கோப்புப் படம் - ANI
பகிர்:

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

வணிக சிலிண்டர் விற்பனை நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்தது. தொடர்ந்து உணவகங்கள், தொழிற்சாலைகள் என வணிக நிறுவனங்கள் இதுபற்றி கவலை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கூட்டாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

"தற்போதைய போர்ச் சூழலால் உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் எல்பிஜி சிலிண்டர் உற்பத்தியை மேம்படுத்தவும் வீட்டு உபயோகத்திற்கு சிலிண்டர் வழங்கவும் முன்னுரிமை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற வீட்டு உபயோகம் அல்லாத அத்தியாவசியத் துறைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க முன்னுரிமை வழங்கப்படும்.

பிற அத்தியாவசியத் துறைகளின் கோரிக்கைகள் எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தகுதி, தேவை மற்றும் தயாரிப்பு அடிப்படையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இதற்காக எண்ணெய் நிறுவனங்களின் இயக்குநர்கள் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் இ-மெயில் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. பிற அத்தியாவசியத் துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அவர்களின் தேவை, தகுதி, சிலிண்டர் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்து விநியோகம் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Cylinder priority for essential sectors and domestic use: oil companies announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments