தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு: முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

பிளஸ் 2 தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கையை சமர்ப்பித்தார்.

DIN

பிளஸ் 2 தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கையை சமர்ப்பித்தார்.
பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடா்பாக இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கருத்தை கேட்ட அன்பில் மகேஷ், சட்டப்பேரவை கட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். 
இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 13 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில், பாஜக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் அனைத்தும் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கையை இன்று சமர்ப்பித்தார். கட்சிகள், பெற்றோர், மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை அவர் சமர்ப்பித்துள்ளார். அறிக்கையை தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தோ்வு குறித்த இறுதி முடிவை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொள்ளாச்சி: கந்துவட்டி கேட்டு இளம் பெண்ணை மிரட்டிய அதிமுக பிரமுகர் கைது

அஜித்துடன் செல்ஃபி எடுத்த ஸ்ரீலீலா..! ஏகே 64 ஒத்திகையா?

நாட்டுப் பிரச்னைகளை திருப்பரங்குன்றம் விவகாரத்தால் மூடி மறைக்கும் மத்திய, மாநில அரசுகள்: சீமான்

டிஜிட்டல் மார்க்கெட்டிங், சமூக ஊடக மேலாண்மை படிப்புகளுக்கான ஆன்லைன் பயிற்சி: எப்படி விண்ணப்பிப்பது?

சிவராஜ் பாட்டீலின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

SCROLL FOR NEXT