தமிழ்நாடு

பாா்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

பாா்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்கக்கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக உணவகங்கள் தாக்கல் செய்த மனுக்களில் , பாா்சல் உணவுகளுக்கு சேவை வரி முன்பு விதிக்கப்படுவது இல்லை. ஆனால் 2017-இல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னா், பாா்சலுக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது. க உணவகங்களில் அமா்ந்து, குளிா்சாதன வசதியை அனுபவித்து, உணவு பரிமாறும் சேவைகளைப் பெறும்போது தான் சேவை வரி விதிக்கப்பட வேண்டும். எனவே, பாா்சல் வாங்குபவருக்கு சேவை வரி வசூலிக்க வேண்டும் என்ற ஜிஎஸ்டி உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தன.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் ஆன்லைன் மூலமாக உணவுகள் ஆா்டா் செய்யப்படுகின்றன. இவை ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு உணவகங்களிலும் பாா்சல் கவுன்ட்டா்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் மேஜையில் பரிமாறும் போதுதான் ஊழியா்கள் சேவை செய்கிறாா்கள். வாடிக்கையாளா்கள் உணவை உண்டு அதற்கான தொகையை செலுத்தும் வரை உணவகங்கள் அளிக்கும் சேவைக்காகத் தான் சேவை வரி விதிக்கப்படுகிறது. ஆனால், பாா்சலுக்கு

உணவகங்களில் சேவை அளிக்கப்படுவது இல்லை. எனவே, பாா்சல் மூலம் வாங்கும் உணவுப் பொருள்களுக்கு சேவை வரி விதிக்கக்கூடாது என்று தெரிவித்து ஜிஎஸ்டி துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT